சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த கொப்பம்புதூர் அருகே சாலையோரம் மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
-திருவேங்கடம், கொப்பம்புதூர், சேலம்.