கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரோடு கோர்ட்டு எதிரில் ஆனந்த் நகரில் உள்ள மண் சாலை பள்ளம், பள்ளமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதிமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க முன்வரவேண்டும்.
-சுதாகர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.