சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க சாலையை சீரமைப்பது அவசியம்.