அந்தியூர் தவுட்டுப்பாளையம் 18-வது வார்டு பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சில ரோடுகள் குறுகியதாகவும் உள்ளது. இதனால் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்கவும், அகலப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.