நடவடிக்கை தேவை

Update: 2023-02-22 08:34 GMT
நடவடிக்கை தேவை
  • whatsapp icon

நடவடிக்கை தேவை

தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டித்தோப்பில் இருந்து மண்ணடிக்கு செல்லும் கால்வாய் கரையோர சாலை உள்ளது. இந்த சாலையை கடந்துதான் மண்ணடி, தென்பாறை கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.94456 37194

மேலும் செய்திகள்