வடலூர் ரயில்வே கேட்டில் இருபுறமும் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.