சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையத்திலிருந்து சங்கம் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கும், நங்கவள்ளி சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கும் நெடுஞ்சாலை துறையினரால் தடுப்புக்கல் வைக்கப்பட்டுள்ளது. லாரிகள் அதிகம் போக்குவரத்து உள்ள போது போடப்பட்டது. ஆனால் தற்போது லாரிகள் புறவழிச்சாலை வழியாக செல்வதால் தடுப்புக்கல் வைக்க வேண்டியதில்லை. தடுப்புகள் இருப்பதால் இருசக்கர வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் மட்டும் செல்வதால் தடுப்புகள் தேவையில்லை என்ற நிலை உள்ளது. சாலையை இரு பகுதியாகப் பிரிப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தடுப்பு கற்களை அகற்ற வேண்டும்.