பவானி அருகே தளவாய்ப்பேட்டை பகுதியில் 4 சாலைகள் பிரியும் இடத்தில் வாகனங்கள் மிக வேகமாக வருகின்றன. இதன் அருகே பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே தளவாய்ப்பேட்டை 4 சாலைகள் பிரியும் இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.