கோபி பஸ் நிலையம் அருகே உள்ள குதிரை வண்டி நிறுத்தம் எதிரே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் குழி இருப்பது தெரியாமல் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள குழியை மூடுவதுடன், சாலை விரிவாக்க பணியையும் முழுமையாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.