திட்டக்குடி அருகே கோழியூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.