மயிலாடுதுறை மாவட்டம் 19-வது வார்டு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அங்குள்ள ஒரு சில சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களினால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தரவும், வேகத்தடைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுப்பார்களா?
