மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக ஆக்கூர்-அப்புராசபுரம்புத்தூர் சாலை உள்ளது. ஆனால் இந்த சாலை மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.