சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் குறுகிய பாலம் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது அச்சத்துடனே செல்கின்றனர். இதை தவிர்க்க குறுகிய பாலத்தை அகற்றவிட்டு அங்கு விரிவுப்படுத்தப்பட்ட புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.