வேகத்தடையில் வா்ணம் பூச வேண்டும்

Update: 2023-02-05 18:30 GMT
சிதம்பரம் நகரங்களில் பல்வேறு பகுதிகளில் விபத்தை தடுக்க சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வேகத்தடை இருப்பது எளிதில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், அங்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தொியாமல், வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்