சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-02-05 12:37 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே ஆற்றங்கரை பகுதியில் சாலை பணி நடந்தது. அப்போது அந்த சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை மூடப்படாமல் உள்ளது. இதனை அறியாமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்