கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழாம்பூர் செல்லும் சாலையில் உள்ள பூவன்குறிச்சி மேற்கு மற்றும் கிழக்கு குளக்கரைகளில் சாலையை பெயர்த்து தண்ணீர் செல்வதற்காக இரண்டு மடைகள் அமைக்கப்பட்டது. இந்த வேலைகள் முடிந்த பிறகு மீண்டும் சாலையை அமைத்து செப்பனிடாததால் அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் மீண்டும் அந்த சாலையை அமைத்து தர வேண்டுகிறேன்.