கடையம் முச்சந்தி பிள்ளையார் கோவிலில் இருந்து திருமலையப்பபுரம் வரை உள்ள சாலை பல இடங்களில் உடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.