சுகாதார சீர்கேடு

Update: 2023-02-05 05:30 GMT

அந்தியூர் அருகே பிரம்மதேசம்புதூர் பாலத்தில் இருந்து காட்டுப்பாளையம் செல்லும் வழியில் பொதுகிணறு உள்ளது. பயன்படுத்தப்படாத இந்த பொது கிணற்றில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்