சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து கடலூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை கரடு, முரடால் உள்ளதால் வாகனங்களின் டயரை பதம் பாா்த்து விடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
