பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-01 13:15 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் ரோட்டிலிருந்து தச்சத்தெருவிற்கு திரும்பும் இடத்தில் நீண்ட நாட்களாக சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்