சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-01 12:54 GMT

அரியலூர் மாவட்டம். செந்துறை அருகே உள்ள மருவத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சேடக்குடிக்காடு கிராமம். மருவத்தூரில் இருந்து சேடக்குடிக்காடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்