புழுதி பறக்கும் சாலை

Update: 2023-01-29 13:14 GMT

அரியலூர் முதல் செந்துறை வரை சாலை விரிவாக்கம் பணி கடந்த பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிகளினால் பல்வேறு விபத்துக்கள் நிகழும் அபாய நிலை உள்ளது. குறிப்பாக அரியலூர் குரும்பன் சாவடி முதல் தாமரைகுளம், ஓட்டக்கோவில் ஆகிய ஊர்களின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆங்காங்கே சின்ன ஜல்லி கற்கள் சாலையில் போடப்பட்டுள்ளது. ஆனால் தார் சாலையாக இதுவரை மாற்றம் செய்யவில்லை. இந்த சாலை வழியாகத்தான் அங்குள்ள 2 சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் செல்லும்போது சாலை முழுவதும் புழுதி படலமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் புழுதி பறப்பதால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய முடியாமல் தவிப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் மிகவும் மோசமான நிலையே இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்