திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இதன் காரணமாக சாலை விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வேகத்தடை அமைப்பது அவசியம்.