சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியில் இருந்து மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ போன்ற அவசர தேவைக்கு ஓடும் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.