சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2022-07-19 12:21 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரின் மையப்பகுதியில்  கண்ணன் பஜார் உள்ளது. இந்த பஜாரில் பலசரக்கு மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் இந்த பஜார் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நேரவிரயத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையின் இருபுறமும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 


மேலும் செய்திகள்

சாலை பழுது