கடலூர் செம்மண்டலம்-கம்மியம்பேட்டை சாலையில் தினசரி வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே விபத்துகளை தடுக்க செம்மண்டலம்-கம்மியாம்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்வதோடு, இருவழிசாலையாக மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.