கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் கணபதி அக்ரகாரம் அருகே உள்ள தஞ்சை பிரிவு சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,கணபதி அக்ரகாரம்.