குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-18 17:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் வரை செல்லும் தார்சாலையானது, அமைக்கப்பட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியது. மேலும் ஒரு சில இடங்களில் தார்சாலை இருந்த இடமே தெரியாத அளவிற்கு வெறும் ஜல்லிக்கல் மற்றும் மண் சாலையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்