கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் டீ. நெடுஞ்சேரியில் உள்ள முருகன் கோவில் தெருவில் தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனா். இதை தவிர்க்க அங்கு தார் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.