வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-12-21 17:30 GMT
கடலூர் இம்பீரியல் ரோடு-எஸ்.என்.சாவடி இணைப்புச்சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் எஸ்.என்.சாவடி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. மேலும் இந்த இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழி போல் காணப்படுகிறது. எனவே இம்பீரியல் ரோடு-எஸ்.என்.சாவடி இணைப்புச்சாலையை சீரமைத்து அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்