திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கூட்டுறவு வங்கியிலிருந்து, ஊராட்சி மன்ற அலுவலகம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.