மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சியில் அன்னப்பன்பேட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் விவேகானந்தர் தெரு ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.