ஆபத்தான பள்ளம்

Update: 2022-12-21 14:19 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரித்தெரு அருகில் ஆஸ்பத்திரி சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்