சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-18 12:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் கிராமத்தில் பழைய தபால் அலுவலகம் அருகே பாலக்கரை மெயின் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி