சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணம் ஊராட்சி அருகே சாத்தம்பத்தியில் விசாலயன்கோட்டை-பெருங்குளம் சாலை செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டது. பின்னர் இந்த பராமரிப்பு பணியானது கிடப்பில் போடப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை பராமரிப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
கதிர், எஸ்.ஆர்.பட்டணம்.