சேத்தியாதோப்பு அருகே சென்னை - கும்பகோணம் செல்லும் சாலையின் மின் நகர் பகுதியில் உள்ள சாலையில் சேதம் ஏற்பட்டு பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.