மயிலாடுதுறை மாவட்டத்தில் தில்லையாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மெயின் சாலை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த சாலையில் சிறிதளவு மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.