மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வேலம்புதுக்குடி செல்லும் இணைப்பு சாலை உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும்.