நெல்லை- தென்காசி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அங்கு மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்லும் இடங்களில் போதிய மின்விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றுவதுடன், போதிய மின்விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.