விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.