சாலை சீரமைக்கப்பட்டது

Update: 2022-12-14 07:57 GMT

சாலை சீரமைக்கப்பட்டது

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பியந்தரையில் இருந்து நீர்வக்குழி, தெற்கு பிடாகைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-சுருதி, தெற்கு பிடாகை

மேலும் செய்திகள்