அகற்றப்பட்ட வேகத்தடையால் மக்கள் அச்சம்

Update: 2022-07-17 18:32 GMT

புதுக்கோட்டை அரிமளம் சாலையில் கொசலாகுடியை அடுத்துள்ள அந்தோணியார் சர்ச், டைமன் நகர் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி புதுக்கோட்டைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அந்த வேகத்தடை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. வேகத்தடை அப்புறப்படுத்தி 40 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது .மேலும் அந்தோனியார் சர்ச்சுக்கு செல்ல சாலையை கடக்க பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்