நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.