மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடி, அரிவளுர் இணைப்பு சாலையில் கூட்டுறவு அங்காடி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதுடன் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், மழை பெய்யும்போது பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பலர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே, குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.