மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ராஜீவ்காந்தி சிலை அருகே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைக்க வேண்டும்.