பரங்கிப்பேட்டை சின்னத்தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.