சேறும் சகதியுமான சாலை

Update: 2022-12-04 16:40 GMT
  • whatsapp icon

மதுரை கரும்பாலை பள்ளிவாசல் கிழக்கு தெரு ,சத்தியவாணி ,முத்துநகர் சந்து சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக இந்த சந்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயானது சேதமடைந்து நீரானது வெளியேறி வருகிறது. இதனால் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்