சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தி திடல் சாலை மண்ரோடாக குண்டும், குழியுமாக இருந்தது. இதனை செய்தியாக தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டது. தற்போது செய்தி எதிரொலியாக மண்சாலை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.