கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தை அடுத்துள்ள மணக்கரையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகளை கடித்து குதறுகின்றன. மேலும், இருசக்கர வாகனங்கள், கார்களை நாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?