கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக காங்கிரீட் சாலை போடப்பட்டது. காங்கிரீட் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் காங்கிரீட் சாலை நெடுகிலும் சிதிலமடைந்துள்ளது. மேலும் காங்கிரீட் சாலையின் இருபுறமும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக இந்த கான்கிரீட் சாலை வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள காங்கிரீட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.